ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு பயணம்

இலங்கை வந்தார் பான் கீ மூன் ! | Virakesari.lk

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கு பயணம்  செய்துள்ளார்.

பான் கீ மூன், அவரது பாரியார் உள்ளிட்ட உட்பட நான்கு பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பான் கீ மூன் உள்ளிட்ட குழுவினரை வரவேற்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

சியோலை தளமாகக் கொண்ட குளோபல் கிரீன் க்ரோத் நிறுவனத்தின் தற்போதைய தலைவராக பதவி வகிக்கும் உள்ள பான் கீ மூன், பெப்ரவரி இலங்கையில், காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

முன்னதாக 2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளராக இலங்கைக்கு பயணம் செய்த பான் கீ மூன், இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் உடன்பாடு ஒன்றை செய்துக்கொண்டார்.

இந்த உடன்பாடுக்கு பின்னர், இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் விடயத்தில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.