சிறீலங்காவின் ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியில் தொடரும் உள்முரன்பாடுகளின் தொடர்ச்சியாக ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அகிலா விராஜ் காரியவசம் இன்று (25) தெரிவித்துள்ளார்.
அவர்கள் கட்சியின் விதிகளை மீறியுள்ளனர் எனவே ஒழுக்க விதிகள் கட்டுப்பாடு மீறல் தொடர்பான நடவடிக்கை அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயதாசா ராஜபக்சா, தினேஸ் கங்கன்டா, எஸ்.பி நவீன், அசோக் பிரியந்தா மற்றும் ஆனந்த அலுத்கம ஆகியோரே நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன அவர் மேலும் தெரிவித்துள்ளார்.