ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தேசிய பட்டிய லில் உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள தாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஞ்சித் மத்தும பண்டார
இம்தியாஸ் பகீர் மர்கார்
திஸ்ஸ அத்தநாயக்க
ஹரீன் பெர்ணான்டோ
மயந்த திசாநாயக்க
எரான் விக்ரமரத்ன
டயனா கமகே
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவதற்கான அதிகாரம் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பேச்சின் போதே இந்த அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது. இதன்போது, தமிழ் முற்போக்கு கூட்டணி, ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் தமக்கு தலா ஒரு ஆசனம் தேசியப்பட்டியலில் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.