எலிகளில் பரிசோதனை வெற்றி;கொரோனா தடுப்பு மருந்துக்கு உரிமைகோரும் இத்தாலி

489 Views

கொரோனா வைரஸ் நோய் (COVID-19) தடுப்பூசி முதன்முறையாக மனித உயிரணுக்களில் வைரஸை செயற்பாடற்றதாக்கியுள்ளது என ரோமின் தொற்று நோய் ஸ்பாலன்சானி( Rome’s infectious-disease Spallanzani Hospital) மருத்துவமனை தெரிவிக்கிறது.இங்கு எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் நல்ல பெறுபேறுகள் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

”இது தான் இத்தாலியில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. மனித உடலில் பரிசோதித்து பார்ப்பது கோடை காலத்திற்கு பிறகு நடைபெறும்” என்று மருந்துகளை உருவாக்கும் நிறுவனமான டாகிஸின் தலைமை நிர்வாக அதிகாரி லூய்கி அவுரிசிச்சியோ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ள இத்தாலி விஞ்ஞானிகள், அதற்கு உரிமை கோரியுள்ளனர்.

Leave a Reply