அரசியல் கைதிகளை விடுவிக்க சம்பந்தன் கோரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்திகளையடுத்து, அரசியல் கைதிகள் சம்பந்தனுக்கு பகிரங்க மடல் ஒன்றை விடுத்துள்ளனர்.
சம்பந்தன் ஐயா ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அரசியற் கைதிகள் என்பவர்கள் தமிழர் விடுதலைக்கு தங்கள் வாழ்வை தந்தவர்கள். மற்றவர்கள் அப்பாவிகள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள். இன்று அரசியல் கைதிகளின் குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் பொறுப்புள்ள பதவியில் உள்ள நீங்கள் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.
தாங்கள் எங்களின் விடுதலை தொடர்பில் எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல் அரசிற்கு ஆதரவு வழங்கியமையே அரசியல் கைதிகளின் இந்த சிக்கலான நிலைக்கு காரணமாகும்.
இனிவரும் காலங்களில் மக்களை ஏமாற்றும் வேலைகளை செய்யாது, தமிழ் அரசியல் கைதிகளின் துன்பமான நிலையை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் நடத்தாது, விடுதலை தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிற்கு நீங்கள் வழங்கும் ஆதரவு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும். என்று அந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.