எந்த தேர்தலை நடத்துவதற்கும் நாம் தயார் – தேர்தல் திணைக்களம்

நாட்டின் தேவை கருதி எந்தவொரு தேர்தலை நடாத்தவும் தாம் தயாராக இருப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கோ மாகாண சபை தேர்தலுக்கோ தாம் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஒன்றை நடாத்துவதற்காக தேவையான அலுவலக குழாம் தெரிவு உள்ளிட்ட விடயங்களும் பூர்த்தியடைந்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை நிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக செலுத்தப்பட வேண்டிய பணத்தொகைகளை குறித்த அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது