532 Views
நாட்டில் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளில், எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், திருடர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்;
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், பிரதான அரசியல் கட்சிகள் இரண்டினதும் தலைவர்கள் நல்ல நண்பர்கள், ஆகவே இவர்கள் ஆட்சிக்கு வந்தால், திருடர்கள், கொலையாளிகள் போன்றோருக்கு ஒருபோதும் தண்டனை வழங்கப்படமாட்டாது’ என்றார்