எந்த அரசாங்கமும் இராணுவத்தைக் காட்டிக்கொடுக்காது – சரத் பொன்சேகா

தேசிய கொள்கைகளின்படி, எந்த அரசாங்கமும் நாட்டின் இராணுவ வீரர்களைக் காட்டிக்கொடுக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பெலியத்த பகுதியில் வைத்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். எந்தவொரு இராணுவத்தினரையும் எந்த அரசாங்கமும் காட்டிக்கொடுப்பதும் இல்லை, அவர்களுக்கு ஆபத்து ஏற்பட இடமளிப்பதும் இல்லை எனத் தெரிவித்தார்.