எதிர்க்கட்சித் தலைவராக தற்போதைய சபாநாயகர் கரு ஜெயசூரியாவை நியமனம் செய்ய விருப்பம் கொண்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சபாநாயகர் கரு ஜெயசூரியாவிற்குமிடையில் நடைபெற்ற இரு கருத்தரங்குகளில் சஜித் பிரேமதாசா கலந்து கொள்ளத் தவறியதையடுத்தே ரணில் விக்கிரமசிங்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கரு ஜெயசூரியா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுமிடத்து, அவர் தனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டி நேரிடும்.
இதேவேளை, இளம் தலைமைக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே கரு ஜெயசூரியாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ரணில் விக்கிரமசிங்க ஒப்புக் கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.