எங்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் – செல்வராசா கஜேந்திரன்

பன்னிரண்டு நாட்கள் தன்னை உருக்கி பிறருக்கு தீங்கு நினைக்காமல் இத்தேசத்து மக்களுடைய நல்வாழ்வுக்காக தனதுயிரை தியாகம் செய்தவரே தியாகதீபம்.

நினைவேந்தல் உரிமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தான ஒன்று. சமூகங்களுக்கிடையே இன விரிசலை ஏற்படுத்த அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டதே இத்தாக்குதல். தமிழ்மக்களுடைய நியாயமான உரிமைகளை சிங்கள சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எங்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதற்காக தமிழினம் ஒன்றுபட வேண்டும். எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன்.

தியாகி திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவுதினத்தின் ஐந்தாம் நாள் 19.09.2023 அன்று திருகோணமலை சிவன்கோவிலடியில் இடம்பெற்றது. அதில் பங்கேற்று மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைப் பரப்புச் செயளாளர் நடராஜர் காண்டீபன் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=rouUrN82eus