ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் கைது

433 Views

எகிப்தில் அரசின் ஊழலுக்கு எதிராக கடந்த ஒரு சில தினங்களாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மனித உரிமை செயற்பாட்டளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதினையும் நிர்வாகம் வெளியிடவில்லை.

ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசியின் ஆட்சியில் எகிப்தில் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பரந்த அளவில் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

10 பேருக்கு அதிகமானவர்கள் பொது இடத்தில் ஒன்றுகூடுவது கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் எகிப்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி மொஹமது முர்சிக்கு எதிராக இராணுவ சதிப்புரட்சி மூலமே இராணுவ தளபதியாக இருந்த சிசி ஆட்சியை பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply