உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் வாழ்ந்து வந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் ஸியோனா சாணா தனது 76 வயதில் காலமானார்.

38 மனைவிகள், 89 பிள்ளைகள், 36 பேரக்குழந்தைகள் என உலகிலேயே மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக ஸியோனா சாணா அறியப்படுகின்றார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.

உலகின் மிகப்பெரிய குடும்பமாக அறியப்படும் இவரது குடும்பத்தினர் வாழும் பகுதி, மிசோரம் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க சுற்றுலா இடமாகவும் மாறியதால் இவர்கள் வாழும் குடியிருப்புப்பகுதி சுற்றுவாசிகளிடையேயும் உள்ளூர் மக்களிடையேயும் மிகவும் பிரபலமானது.

Indian man with 'world's largest family' dies

ஸியோனாவின் மறைவுக்கு மாநில முதல்வர் ஸோராம்தாங்கா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply