உலகளவில் 16.31 கோடியைக் கடந்தது கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.31 கோடியைக் கடந்துள்ளது.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33.83 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.