உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை கைது செய்க- என்.எம்.அமீன் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

430 Views

ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 8 தற்கொலை குண்டுத்தாரிகள் உள்ளடங்களாக சுமார் 277 பேர் இறந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. மேலும் 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பொறுப்பான அனைவரையும் கைது செய்வதன் மூலம் நீதியை உறுதி செய்யுமாறு இலங்கை முஸ்லிம் கவுன்சில் (MCSL) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு அனைத்து கிறிஸ்வர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன்,

 ‘2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் போது உயிரிழந்த மற்றும் காயமுற்ற எங்கள் அப்பாவி சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நாம் நினைவுகூருகிறோம்.

மேலும் அனைத்து முஸ்லிம்களையும் சக இலங்கையர்களையும் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் வேரறுக்க அரசாங்கத்துக்கு உதவுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டதுடன் இதனால் இலங்கையில் அமைதியான சகவாழ்வை அடைய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply