உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சந்தேகத்திடமான வாகனம் மீட்பு

486 Views

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலிலுள்ள நபரொருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு ‘வான்’ மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினால் இன்று அட்டானைச்சேனை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் சந்தேகத்தின் பேரில், 2019 ஏப்ரல் 25ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, மொனராகலை சிறைச் சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த ‘வான்’ மீட்கப்பட்டுள்ளது.

IMG 6347 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் - சந்தேகத்திடமான வாகனம் மீட்பு

2018ஆம் ஆண்டு குறித்த ‘வான்’ காத்தான்குடியில் இருந்து நுவரெலியா பயிற்சி முகாமுக்கு பயிற்சியாளர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ‘வான்’ கடந்த மாதம் சம்மாந்துறையில் உள்ள வாகன விற்பனை முகவருக்கு விற்பனைசெய்யப்பட்டு அவர் ஊடாக அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள ஒருவர் கொள்வனவு செய்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

Leave a Reply