உண்மைகளை கண்டறியும் விசாரணை தேவை – அனுரா

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தனது உயிருக்கு அரசாங்கத்தால் அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்து நாட்டைவிட்டு வெளியேறியது தொடர்பில் உண்மைகளை கண்டறியும் வெளிப்படைத்தன்மையான விசாரணைகள் தேவை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராகுமார திஸநாயக்கா நேற்று (30) தெரிவித்துள்ளார்.

நீதிபதியின் குற்றச்சாட்டு உண்மையானால் இந்த நாடு எங்கே உள்ளது என்பதை அது புலப்படுத்தும்.  அரசுக்கு சார்பாக தீர்ப்பு வழங்காததால் நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.