நில ஆக்கிரமிப்பு மற்றும் திட்டமிட்ட பௌத்தமயமாக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்க முதுகெலும்பில்லாத இலங்கை காவல்துறையினர் நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தி ஜனநாயகப் போராட்டங்களுக்கு தடை விதிக்கிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட உபஅமைப்பாளர் கிருஸ்னபிள்ளை ஸ்ரீபிரசாத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகப் போராட்டங்களை நடத்துவதற்கு கூட தமிழ் மக்களுக்கு சுதந்திரமும் உரிமையும் இல்லாத நிலை திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.