உடல்கள் அடக்கம் செய்யும் முடிவை அமைச்சரவையால் எடுக்க முடியாது – அமைச்சர் கெஹலிய

301 Views

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் அமைச்சரவையால் தீர்மானத்தை எடுக்க முடியாது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவேண்டுமா? அல்லது அடக்கம் செய்ய வேண்டுமா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை. இது தொடர்பான முடிவை சுகாதார அதிகாரிகளே எடுக்க வேண்டும். அமைச்சரவையில் இந்த விடயம் தொடர்பில் பல தடவை ஆராயப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Reply