429 Views
தமிழ் நாட்டில் உள்ளகும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே, ஈழ தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. அங்கு, 912 குடும்பங்களை சேர்ந்த, 2,737 பேர் அகதிகளாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள ஈழச்சுடர் விளையாட்டு கழகம் சார்பில், ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில், விளையாட்டு, பேச்சு, கவிதை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டுக்கான போட்டிகள், நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகின்றன. பெண்கள், ஆண்கள், சிறுவர் – சிறுமியர் என, நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர் என இந்திய ஊடகமான தினமலர் செய்தி வெளியிட்டிருக்கிறது.