ஈழத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமைக்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் தமிழக ஆளுநர்

இந்தியாவில் குடியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று(06) தொடங்கியது. சட்டசபையில் உரையாற்றிய தமிழக ஆளுநர், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பேசினார்.

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென மத்திய அரசாங்கத்திடம் தமிழ்நாடு வலியுறுத்தும் எனவும், தமிழக மக்கள் மதபேதமின்றி அனைவரினதும் நலன்களும் பாதுகாக்கப்படும் எனவும் இதனை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும். இலங்கை அரசின் சிறைகளில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.