ஈரோஸ் அமைப்பின் மூத்த போராளி அருள்பிரகாசம் காலமானார்

தமிழீழ விடுதலைக்காக போராடிய ஈழ விடுதலை அமைப்புக்களில் ஒன்றான ஈரோஸ் அமைப்பின் ,மூத்த போராளியும் ஈரோஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், “லங்கா ராணி” நூலின் ஆசிரியரும் உலகப் புகழ்பெற்ற மேற்குலகப்பாடகியும் இனஉணர்வாளருமான பாடகியான மாயா என அன்போடு அழைக்கப்படும் மாதங்கி அருட்பிரகாசரின் அன்புத் தந்தையுமான போராளி அருளர் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கலையும் இறுதி வணக்கத்தையும் தெரிவித்து கொள்கின்றோம்!

குறிப்பாக உலக அரங்கில் தமிழர்களின் இனவலியை தனது தனித்துவமான கலைத்திறன் ஊடக விட்டு கொடுப்பின்றி விமர்சனங்களுக்கும் அஞ்சாமல் எடுத்தியம்பி வரும் அன்பு சகோதரி மாயாவிற்கு எம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.

நன்றி: சிவந்தினி

 

Leave a Reply