306 Views
உளவு பார்த்ததாக ஈரானில் கைதுசெய்யப்பட்ட சீன-அமெரிக்க ஆராய்ச்சியாளரும், அமெரிக்கா கைதுசெய்து வைத்திருந்த ஈரானிய விஞ்ஞானியும் கைதிகள் பரிமாற்ற அடிப்படையில் விடுய்விக்கப்பட்டுள்ளனர்.
“வெளிநாட்டு அரசாங்கங்களுடன் ஒத்துழைத்ததற்காக” சியு வாங் ஈரானில் 2016 இல் கைது செய்யப்பட்டார். ஈரானுக்கு உயிரியல் பொருட்களை ஏற்றுமதி செய்ய முயற்சிப்பதன் மூலம் வர்த்தக தடைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் ஸ்டெம் செல் (stem cells) நிபுணரான பேராசிரியர் மசூத் சோலைமணி அமெரிக்காவால் கைதுசெய்யப்பட்டார்.
இந்த கைதிகள் பரிமாற்றத்திற்கு சுவிஸ் அரசாங்கத்திற்கு ஒரு இடைத்தரகராக செயற்பட்டது.