ஈரானில் தொடரும் பதற்ற நிலை – பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

இளம் குர்திஷ் பெண் மஹ்சா அமினி காவல்துறையினரின் காவலில் இறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஈரானியர்கள் பத்தாவது நாளாகவும் நீதித்துறையின் எச்சரிக்கையை மீறி வீதிகளில் இறங்கியுள்ளனர்.

அமைதியின்மை தொடங்கியதில் இருந்து குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓஸ்லோவை தளமாகக் கொண்ட குழுவான ஈரான் மனித உரிமைகள் (IHR) ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 57 என்று தெரிவித்துள்ளது.

மாசா அமினி என்ற குர்திஷ் இன இளம்பெண் காவல்துறை காவலில் உயிரிழந்ததையடுத்து,   அங்கு போராட்டம் நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.