இலங்கை-போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை-எரங்க குணசேகர

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டத்தின் இரண்டாம் கட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்வரும் நாட்களில் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு நாட்டை ஆள அதிகாரம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் மருதானையில் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவில் குணசேகரவும்  ஒருவர். இதில்  கைது செய்யப்பட்ட 83 ஆர்ப்பாட்டக்காரர்களில் 80 பேர் காவல்துறை பிணையிலும் 3 பேர் நீதிமன்றத்தால் பிணையிலும் விடுவிக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.