ஈபிடிபிக்குள் உட்கட்சிமோதல்-வவுனியா இளைஞரணி தலைவர் கைது

426 Views

ஈழமக்கள் ஜனநாயககட்சியின் உறுப்பினர்களிற்கிடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற உட்கட்சிமோதலால் கட்சியின் வவுனியாமாவட்ட உதவி செயலாளர் மற்றும் இளைஞரணி தலைவர் ஆகியோர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் கட்சியினுடைய இளைஞரணித் தலைவரும், பிரதேசசபை உறுப்பினருமான து.விக்டர் வைத்தியசாலையில் இருந்து வீடுதிரும்பிய நிலையில் வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் உதவிச்செயலர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

Leave a Reply