ஈகைப்போராளி கொளத்தூர் முத்துகுமாரின்  தந்தை  காலமானார்

429 Views

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசால் நடத்தப்பட்ட போரில் தமிழீழ மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது,  குறித்த படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி  தீக்குளித்து தன்னுயிர் ஈந்த ஈகைப்போராளி கொளத்தூர் முத்துகுமாரின்  தந்தை குமரேசன் ஐயா உடல் நலக் குறைவு காரணமாக  காலமாகியுள்ளார்.

அன்னாரது இறுதி சடங்கு சென்னை கொளத்தூர் சிவசக்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (20.5.2021) வியாழக்கிழமை  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரேசன் ஐயாவின் மறைவுக்கு “இலக்கு  செய்தி நிறுவனம்” தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

Leave a Reply