காசாவின் ரபா பகுதியில் உள்ள கடற்பகுதியூடாக தரையிறங்கிய இஸ்ரேலிய கடல் கொமோண்டோக்களுடன் வெள்ளிக்கிழமை (27) கடும் மேதல்கள் ஏற்பட்டதாகவும், இஸ்ரேலின் வான்படையின் உதவிகளுடன் இஸ்ரேலிய கொமோண்டோக்கள் பின்வாங்கியுள்ளனர் எனவும் ஹமாசின் அல் குசாம் பிரிகேட் தெரிவித்துள்ளது. அந்த சண்டையின் போது ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சவுதி அரேபியா மற்றும் சீனாவின் சிறப்பு படையினர் நீல வாள் 2023 என்ற கடற்படை ஒத்திகை ஒன்றை இந்தவாரம் நிகழ்த்தியுள்ளனர்.
அதேசமயம், பணயக்கiதிகளை மீட்பதில் கடந்த 20 நாட்களில் இஸ்ரேல் அதிக அக்கறைகள் காண்பிக்கவில்லை என தெரிவித்து பணயக்கைதிகளின் உறவினர்கள் எகிப்தின் துர்தரகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.