போருக்கான செலவுகள் உள்ளடங்கலாக இஸ்ரேலின் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை 400 விகிதம் அதிகரித்துள்ளது எனவும் இஸ்ரேலின் நாணயமாக செகெல் நாணயம் 15 விகிதம் வீழச்சி கண்டுள்ளதுதாகவும் இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமான 5 வங்கிகளின் பங்குகளும் 20 விகித வீழ்ச்சியை கடந்த இரண்டு மாதங்களில் சந்தித்துள்ளது. அல் அக்ஷ புளொட் எனப்படும் படை நடவடிக்கையை தொடர்ந்து 350,000 இஸ்ரேல் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் ஒரு மில்லியன் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவான நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சியை கண்டுள்ளன. அதில் பெப்சி, மக்டொனால்ட், ஸ்ரார்பக் என்பனவும் அடங்கியுள்ளன. தினமும் 250 மில்லியன் டொலர்கள் போருக்கு செலவாகின்றது. அதாவது 1 பில்லியன் செகீல். காமாஸின் ஏவுகணை ஒன்றை தடுத்து வீழ்த்துவதற்கு 20,000 டொலர்கள் தொடக்கம் 100,000 டொலர்கள் செலவாகின்றது. ஆயுதங்களுக்கு செலவிட்ட தொகை 18 பில்லியன் டொலர்கள் இது இஸ்ரேலின் மொத்த உற்பத்தியில் 3.5 விகிதம்.
மேலும் 50,000 வெளிநாட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இஸ்ரேலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 73 விகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. அடுத்த 6 மாதங்கள் போர் நீடித்தால் சுற்றுலாப்பயணத்துறை முற்றாக முடங்கிபோகும் நிலை ஏற்படலாம். இஸ்ரேலின் மிக முக்கிய ரமார் எரிவாயு உற்பத்தி நிலையம் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. பல முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.