இலங்கை :இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இன்று பேச்சுவார்த்தை

68 Views

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுகளை முன்னெடுப்பதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்றையதினம் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இப்பேச்சுவார்த்தையானது, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஜன 05) வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் சந்தித்தவேளையில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய சந்திப்பில் பங்கேற்குமாறு கடந்த மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply