இலங்கை அரசு ஐ.நாவுடன் ஒத்துழைக்க வேண்டும் – இணைத்தலைமை நாடுகள்

நீதியை நிலைநாட்டுவதற்கும் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இலங்கைக்கு தற்போதும் காலம் உள்ளது. இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என இணைத்தலைமை நாடுகள் சார்பில் அறிக்கை வெளியிட்ட பிரித்தானியா நேற்று (11) தெரிவித்துள்ளது.

கனடா, வட மசடோனியா, மலாவி, மொன்ரோநீக்ரோ, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைத்தலைமை நாடுகளின் குழுவில் உள்ளன.

காணி விவகாரம் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க முயற்சித்துள்ளது. இந்த முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் தொடர்ந்தும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் உள்ளன. அதனை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துலக தராதரத்தில் நீதி வழங்கப்பட வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.