இன்று யாழ் நூலகத்தில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸும் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

இதில் யாழ் மாநகர முதல்வரால், தூதுவரிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறிப்பாகத் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஜெனிவாவின் ஊடாகவும் மற்றும் பல வழிகளிலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.