இலங்கை  அரசாங்கம்  பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் –  செல்வம் அடைக்கலநாதன்

இலங்கை  அரசாங்கம் இந்த வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று இது தொடர்பாக  ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை அரசாங்கம் இந்த வருட இறுதிக்குள் பாரியதொரு நிதி நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் என்பதை நான் ஆருடம் சொல்கின்றேன். அதற்கான முதல் படியே இந்த எரிபொருள் விலை ஏற்றம்.

எரிபொருள் மட்டுமல்ல ஏனைய, அன்றாடம் பயன்படுத்தும் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் செய்யப்படுவதற்கான ஒரு காரணமாக இது அமையப்போகின்றது.

இந்த அரசாங்கம் மக்களுடைய அன்றாட பிரச்சினையை சிந்திக்கின்ற அரசாக செயற்படவில்லை என்று இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன்” என்றார்.

Leave a Reply