இலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு

394 Views

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாம்பாறு அணை இலங்கை அகதிகள் முகாமில் பணப் பிரச்சினை காரணமாக இடம்பெற்ற அரிவாள் வெட்டு சம்பவத்தில் 3 போ் படுகாயம் அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் கதிர்வேல் இவரது மகன் ரஞ்சித்குமார் (34) அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் சசிகுமார் (29) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையினால் இருவருக்கும் வாய்தகாறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சசிகுமாறும். அவது உறவினா் மதுரை செவலூா் முகாமைச் சோ்ந்த ரூபன் என்கின்ற சத்தியசீலன் (30) இருவரும் சோ்ந்து. ரஞ்சித்குமார் அவரது மனைவி லலிதா (31) அவா்களது மகள் ரோஷினி (8) ஆகிய 3 பேரையும்  இரவு கட்டை மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனா்.

படுகாயமடைந்த மூவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும் படுகாயமடைந்த ரஞ்சித்தை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஊத்தங்கரை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் இதற்கு முன்னரும் இது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது அங்குள்ள அகதிகள் கொரோனா தொற்று காரணமாக மேலும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு  முகாமை விட்டு வெளியில் செல்லவும் அவர்களுக்கு முழுமையான அனுமதிகள் கிடையாது. இந்த சூழலில் மன உளைச்சல், வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் அந்த மக்கள் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடும் மன நிலைக்கு இயல்பாகவே தள்ளப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply