இலங்கையில் விரைவில் உதயமாகவுள்ள புதிய பல்கலைக்கழகம்!

இலங்கையிலுள்ள மாணவர்களிடையே சர்வதேச மொழித்திறமையை மேம்படுத்துவதற்காக விரைவில் புதிய பல்கலைக்கழகமொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்று (6) கொழும்பு 07 இல் அமைந்துள்ள சிங்கள அகராதி அலுவலக விஜயத்தின் போது அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

தொழில் சந்தையை கருத்திற் கொண்டு இளைஞர்களிடையே சர்வதேச மொழி வல்லுனர்களை உருவாக்குவதே இந்த பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதன் பிரதான நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சிங்கள அகராதி அலுவலகத்தை பல்கலைக்கழக கல்லூரியாக மாற்றி அதனை அரசாங்க பல்கலைக்கழகமொன்றுடன் இணைந்ததாக செயற்படுத்த தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.