இலங்கையில் மாண்டஸ் புயலின் தாக்கம்: 10 ஆயிரம் பேர் பாதிப்பு- வடக்கில் கால்நடைகள் உயிரிழப்பு

269 Views

தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல்  சனிக்கிழமை (10) அதிகாலை வடக்கு தமிழ்நாடு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கரையைக் கடந்தது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் கூடிய குளிர் காலநிலை நிலவியது.

கடும் காற்று மற்றும் குளிருடனான காலநிலை காரணமாக வடக்கில்  500க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் ஆடுகள்  உயிரிழந்துள்ளன.   யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் சுமார் 358 மாடுகளும், 141 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.

இதேவேளை, கடும் காற்று மற்றும் மழை காரணமாக 16 மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 இற்கும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,000 இற்கும் அதிக வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply