இலங்கையில் நிகழ்ந்த குற்றங்கள் – சர்வதேச பொறிமுறை அவசியம் -தீர்மானத்தை அறிமுகப்படுத்தியது அமெரிக்க காங்கிரஸ்

467 Views

இலங்கையில் யுத்தம் முடிவுக்குகொண்டுவரப்பட்ட 12 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இலங்கையில் ‘பொறு ப்பு  கூறலுக்கான செயற்பாட்டுத்திறன் வாய்ந்த  சர்வதேசப் பொறிமுறை” மற்றும் ”நிரந்தரமான அரசியல் தீர்வு ”ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கும் கட்சிசார்பற்ற  தீர் மானமொன்றை  அமெரிக்க காங்கிரசில் பெண் உறுப்பினரான டெபோரா ரோஸ் அறிமுகப்படுத்தியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்த முள்ளிவாய்க்கால்  பாரிய  தாக்குதல் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டது  என்பதை அங்கீகரிக்கும் குறித்த தீர்மானத்தில்,

“முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று   தசாப்தகாலத்திற் கும் மேலாகியும், குற்றமிழைத்தோரை பொறுப்புக்கூற வைக்கஇலங்கை  அரசு தவறிவிட்டது.  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த உறுதிமொழியிலிருந்தும் பின்வாங்கியுள்ளது. “நாட்டில் தண்டனைவிலக்கீடு  நிலவுகிறதால்”. போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் சாட்டுக்களை  , விசாரிக்கவோ, வழக்குத் தொடரவோ தீர்வுகாணத் தவறியு ள்ள”என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஒரு உள்நாட்டு செயல்முறைமூலம்  பொறுப்புக்கூறலையும் நீதியையும் வென்றெடுக்க முடியு ம் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இலங்கையின் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கான மரணங்கள், காணாமல் போனமை , துஷ்பிரயோகம் மற்றும் இடம்பெயர்வுகளை அனுபவித்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில்அதிகளவுக்கு போரினால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒவ்வொரு இரண்டு பொதுமக்களுக்கும் ஒரு சிப்பாய் என்பதாக இராணுவமயமாக்கப்பட்டுள்ளது” என்றும்அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் வடக்கு மாகாண சபை  “நிரந்தர அரசியல் தீர்வொன்றை மேம்படுத்திக்கொள்வதை  ஆதரிக்க” வடக்கு கிழக்கில் ஐ.நா.வின் கண்காணிப்புடன் சர்வஜன வாக்கெடுப்புக்கு   அழைப்பு விடுத்து சொந்த தீர்மானங்களை சபை நிறைவேற்றியுள்ளது என்பதையும் இந்த  தீர்மானம் அங்கீகரிக்கிறது.

மேலும் குறித்த   தீர்மானத்தில்,

1) இலங்கையில் போர் முடிவடைந்த 12 வது ஆண்டு நிறைவடைவதையும்  மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதன் ஆழ்ந்த இரங்கலையும்  தெரிவிக்கிறது.

2) இறந்தவர்களின் நினைவைகவுரவிக்கிறது  மற்றும் நல்லிணக்கம், மீள்கட்டுமானம்  இழப்பீடு மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான   தேடலில் இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களுடனும் அதன் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

3)இந்த நடவடிக்கைகளில்  இலங்கை அரசாங்கத்தின்   தலையீடின்றி மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ,முன்னுரிமை அளித்ததற்காக ஐ. நா. மனித உரிமைகள் பேரவையை பாராட்டுகிறது,

4) காணாமல் போனவர்களின் தமிழ் குடும்பங்கள் உட்பட, இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களிலும் நீதிக்கான வாதிடுவோரின் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கிறது, அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் பதில்களுக்கான கோரிக்கைகளும் சில சமயங்களில் அரசாங்க பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள்,  மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன.

5)இலங்கையின் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட வடகிழக்கு பிராந்தியத்தின் அரசியல் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சர்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறது மற்றும் இன மோதலுக்கு வழிவகுத்த அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி செயல்பட வேண்டும்.

6) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் பரிந்துரைகளுக்கு அமைவாக விசாரணைகள் மற்றும் வழக்குகளை ஆராய அமெரிக்கா பரிந்துரைக்கிறது.

7)இலங்கையில் போரின்போது இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுவதற்கு நம்பகரமானதும் செயலாற்றலைக்கொண்டதுமான  சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கு ஐ. நா. பொதுச்சபை., ஐ. நா. பாதுகாப்பு சபை , ஐ. நா .மனிதஉரிமைகள் பேரவைஆகியவற்றுடன்  அமெரிக்கா செயற்படவேண்டும்  என்றும் தீர்மானத்தில்  வலியுறுத்தப்பட் டுள்ளது.

“மனித உரிமை மீறல்களுக்கு  குற்றவாளிகள் பொறுப்பேற்க வேண்டும்” என்று காங்கிரஸ் உறுப்பினர்  ரோஸ் அறிக்கையொன்றில்   தெரிவித்திருக்கிறார்.  “இலங்கை அரசாங்கம் நீதிக்குத் தடையாக உள்ளது,  நிறுவனரீதியான  மறுசீரமைப்பிற்கு  தடையாக உள்ளது,  தமிழர்கள் உட்பட அதிருப்தியாளர்களுக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் எதிராக மனித உரிமை மீறல்கள்  இழைக்கப்பட்டுள்ளன.”

“இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்க ஒரு சர்வதேச பொறிமுறையை நிறுவுவதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன், மேலும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித மற்றும் சிவில் உரிமைகள் மீறல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வாக்குறுதிகளைப் பின்பற்றுமாறு  ராஜபக்ச அரசாங்கத்தை ஊக்குவிக்கிறேன்,” என்றும்அவர்  கூறியுள்ளார்.

தீர்மானத்திற்கு இணை தலைமை தாங்கியகாங்கிரஸ்  உறுப்பினர் ஜோன்சன் கூறுகையில்,”வடகிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் ,சர்வதேச சமூகத்திடம் யுத்தக் குற்றங்கள் மற்றும்  மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்பேற்க சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளனர்”என்று  தெரிவித்திருக்கிறார்.

நன்றி – தினக்குரல்

Leave a Reply