இலங்கையின் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகளின் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Using laws that don’t conform with international human rights standards – like the PTA – erodes democracy in Sri Lanka. We encourage the government to uphold the rights of the people to express their views.
— Ambassador Julie Chung (@USAmbSL) August 22, 2022
அவர் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.