487 Views
கொடிய வைரஸ் நோயான கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான முதல் நோயாளி இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
உலகெங்கும் வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன.
இந்நிலையில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளி ஒரு சீனப் பெண் என்பதுடன், இந்நோய் பரவாமல் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.