இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

256 Views

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை  உயர்வடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் இருவர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா மரணங்களின் ண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண் ணிக்கை 96 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில்,  வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளில் அதிகமானோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து வருகை  தருவோர்களுக்கு மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளதாக சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Leave a Reply