இலங்கையிலுள்ள சீதா கோயில் புனரமைப்பிற்கு இந்திய மத்திய அரசு 5 கோடி நிதியுதவி

இலங்கையிலுள்ள சீதா கோயிலை புதுப்பிக்க மத்திய பிரதேச அரசு 5கோடி ரூபா நிதி வழங்கியுள்ளது. மேலும் இந்தக் கோயில் சீரமைப்புப் பணியை தொடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மத்திய பிரதேச கலாசாரத்துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் சமீபத்தில் இலங்கை சென்றிருந்தனர். இவர்கள் இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஸவை சந்தித்துப் பேசியிருந்தனர். இந்தச் சந்திப்பில் சீதை சிறைப்பிடித்து இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருந்த சீதா எலியா(அசோகவனம்) பகுதியில் சீதா கோயில் உள்ளது. இந்தக் கோயிலை மேம்படுத்த மத்திய அரசின் நிதியுதவியில் 5கோடி ருபா ஒதுக்கியுள்ளோம். எனவே இதற்கான பணிகளை தொடக்குங்கள் என்றும் அமைச்சர் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில பா.ஜ.க தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகேஸ் சிங் கூறுகையில், அறிவிப்புகளை வெளியிடுவதில் முதல்வர் கமல்நாத் திறமையானவர். மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவு அளிக்க மாநில அரசு மறுத்து வருகின்றது. அவரது மேலிட தலைவர்களை திருப்திப்படுத்த இவ்வாறு செயற்படுகின்றார். இதனை மறைக்க தற்போது பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்த மாநில அரசு சீதா கோயிலுக்கு நிதி வழங்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் பல கோயில்கள் உள்ளன. முதலில் அவற்றை பராமரிப்பது குறித்து சிந்திக்கட்டும் என்றும் கூறியிருக்கின்றார்.

Leave a Reply