குளியாப்பிட்டியவில் புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், மூச்சுத்திணறல் காரணமாக வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கடந்த 16 வருடங்களுக்கு இலங்கை பெண் ஒருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும் தற்போது அவருக்கு 45 வயது என்றும் தெரிவிக்கப்படுகின்றது