இலங்கைக் கடற்பரப்பில் மற்றுமோர் கப்பலில் தீ விபத்து

160 Views

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பல் தீ விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ (MSC Messina) என்ற கப்பலிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மகா ராவணா வௌிச்ச வீட்டிலிருந்து கிழக்குத் திசையில், 480 கடல் மைல் தொலைவில், கொழும்பில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற  MSC Messina எனும் லைபீரியக் கொடியுடன் சென்ற கப்பலின் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக   இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

Leave a Reply