இலங்கைக்கு விஜயம் செய்யும் போது மருந்தை உடன் எடுத்துச் செல்லுங்கள்- தனது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவுரை

இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இலங்கைக்கு விஜயம் செய்தால் தேவையான மருந்துகளை கொண்டு வருமாறு அறிவித்துள்ளனர்.

கொழும்பிற்கு வெளியே மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதாக கூறியுள்ள அமெரிக்கத் தூதரகம், கொழும்பு நகரில் கூட ஆறு பெரிய மருத்துவமனைகள் மட்டுமே இருப்பதாகவும், அந்த ஆறு மருத்துவமனைகளில் மூன்று மருத்துவமனைகளில் மட்டுமே அவசர சேவைகள் இருப்பதாகவும் தனது நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.