இலங்கைக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கும்-சமந்தா பவர்

63 Views

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முழுமையான ஆதரவை வழங்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் அதிகாரி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களின் இயல்புவாழ்க்கையை  கட்டியெழுப்புவதற்கும் நாட்டை முன்னேற்றுவதற்கும் அமெரிக்கா தொடர்ந்தும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குமென சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் தேவைக்காக 40 மில்லியன் டொலர் உள்ளிட்ட இலங்கைக்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

எனினும் தற்போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் இது மிக மிக சிறிய மற்றும் சாதாரண உதவியாகும் என சமந்தா பவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இந்த உதவிகள் சர்வதேச நிதி நிறுவனங்களின் தனியார் துறைக்கும், இலங்கையில் புதிதாக முதலீடுகளை செய்ய எதிர்பார்த்துள்ள முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், புதிய அணுகுமுறைக்குத் தேவையான ஒரு உத்வேகமாக அமெரிக்கா இதன்மூலம் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply