கடந்த சில மாதங்களில் 500 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம்- நோயாளர்கள் பாதிப்பு

இலங்கையில் கடந்த எட்டு மாதங்களில் 500மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்தெரிவித்துள்ளது.

மேலும் அவர்களில் பெருமளவிலானோர் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமலேயே வெளிநாடு சென்றுள்ளதாகவும் அதனால் சுகாதாரத் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதுடன் அப்பாவி பொதுமக்கள் அதனால் பெரிதும் பாதிப்படைவார்கள் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்  மருத்துவர் சமில் விஜேசிங்க அது தொடர்பில் தெரிவிக்கையில்:

கடந்த எட்டு மாதங்களில் 500  மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களின் பெரும்பாலும் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கவில்லை என்பதுடன் கடந்த இரண்டு மாதங்களில் அவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என்றார்.