இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் – சமந்தா

இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து தனது உதவிகளை வழங்கும் என அமெரிக்காவின் அனைத்துலக அபிவிருத்தி அமைப்பின் நிர்வாக தலைவர் சமந்தா பவர் நேற்று (19) தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கா சென்றபோதே பவரை அவர் சந்தித்திருந்தார்.

உழல் தடுப்பு சட்டமூலத்தை தாங்கள் கொண்டுவந்துள்ளதாகவும், அதனை நிறைவேற்றுவதற்கான பயிற்றுவிக்கப்பட்ட அதிகாரிகளை நியமித்து வருவதாவும், எனவே அது செயற்பட ஒரு வருடம் எடுக்கலாம் எனவும் ரணில் பவரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இந்த திட்டங்களை பவர் வரவேற்றுள்ளதுடன், இலங்கையின் அபிவிருத்திக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.