இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் கொழும்பு வந்தார் – இரு வாரம் சுய தனிமைப்படுத்தல்

311 Views

இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கி லென்ஹோங் நேற்று மாலை கொழும்பு வந்தார்.

கொழும்பு வந்தடைந்தவுடன் விமான நிலையத்தில் அவர் மீது பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்ட பின்னர் அவர் இரண்டு வாரங்களில் கடமைகளை பொறுப்பேற்பாரேன கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிரேஷ்ட இராஜதந்திரியான லென்ஹோங் , சர்வதேச கற்கைகளுக்கான சீன நிலையத்தின் தலைவராவார்.

Leave a Reply