இறைமையை மீறும் ஜெனிவா பிரேரணை – சிறீலங்கா அமைச்சர் தினேஷ் கடும் சீற்றம்

516 Views

சிறீலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் பிரிட்டன் தலைமையிலான இணைத் தலைமை நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை சிறீலங்காவின் இறைமையை மீறுவதாக அமைந்திருப்பதுடன், நட்புக்கு விரோதமான ஒரு செயற்பாடு என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கடும் சீற்றத்துடன் தெரிவித்திருக்கின்றார்.

சிறீலங்கா குறித்த பிரேணையின் இறுதி வரைபு கிடைக்கப்பெற்ற நிலையில், ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்ட அமைச்சர், பிரேரணையின் உள்ளடக்கம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகவும், நாட்டின் இறைமையை மீறுவதாகவும் அமைந்திருக்கின்றது எனத் தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகளில் ஒன்றாக உள்ள பிரிட்டன் சிறீலங்கா விவகாரத்தில் நட்புக்கு விரோதமாகச் செயற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சாடினார்.

Leave a Reply