இறுகும் சீனாவின் பிடி – சீன வெளிவிவகார அமைச்சரும் ஜூன் மாதம் இலங்கை வருகின்றார்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (WANG YI) அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

சீன பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய அதேவேளை, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இந்நிலையில்,வெளியுறவு அமைச்சர் வாங் தன்னுடைய பிராந்திய பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். கடந்த வாரம் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பொன்றில் அவர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

இந்த சந்திப்பில் கொரோனா கட்டுப்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஒத்துழைப்பு குறித்து அவர் உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.