இராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

468 Views

இலங்கை மீன் வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன் பிடி கடற்பரப்பில் பயன் பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் பேருந்து எதிரே இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று புதன் கிழமை (16) காலை  ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை பாதீப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லையில் இருந்து அருகே இந்திய இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான  கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் பயன் பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கை அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை கடல் பரப்பில் இறக்கி வருகின்றனர்.

IMG 1062 இராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

பேருந்துகள்  கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும், மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும், கடல் நீரோட்டம், காரணமாக இலங்கை கடற்பகுதிக்கும் செல்லக் கூடும்.

இதனால் படகுகள் மற்றும் வலைகளை சேதமடைந்து படகு ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் நஸ்டம் ஏற்படும் என்பதால் உடனடியாக இலங்கை மீன் வளத்துறை  இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர்.

அதேபோல் நாளுக்கு நாள் உயர்வடையும் எரிபொருள் விலையால்  மீனவர்கள் தங்களது படகுகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள், கலால்,சாலை வரிகளை  நீக்கி மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புதன் கிழமை (16) இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply